tamilnadu

img

கொரோனா தடுப்பு மருந்து: குரங்குகளுக்கு நடத்தப்பட்ட சோதனை வெற்றி

பெய்ஜிங்,மே 8- கொரோனா தடுப்பு மருந்தை குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வெற்றி யடைந்துள்ளதாக  சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை மருந்தும் ஏதும் கண்டு பிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்படவில்லை.பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்து வர்கள் கொரோனா வைரஸிற்கு எதி ரான தடுப்பு மருந்தை கண்டு பிடிக்கும் தீவிரபணியில் ஈடு பட்டுள்ளனர். 

இந்த நிலையில்  பிகோவாக் எனப்படும் தடுப்பு மருந்தை பெய்ஜி ங்கைச் சேர்ந்த சினாவாக் பயோ டெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளுக்கு செலுத்திய பின்பு மூன்று வாரங்கள் கழித்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தினர்.  ஒரு வாரம் கழித்து சோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரை யீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது. இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற் பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது உறுதியாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

;